சோழனிடம் அழுது மன்னிப்பு கேட்ட பல்லவன், அவர் என்ன செய்தார் தெரியுமா?... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் அய்யனார் துணை.
இளம் கலைஞர்கள் நடிக்க குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பம், அண்ணன்-தம்பி பாசம், அழகிய காதல் என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது.
இப்போது கதையில் கொண்டாட்டம் இல்லை என்றாலும் கொஞ்சம் பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், நிலா சொன்னது போல் பாண்டி வானதியை சந்தித்து இன்று எங்கேயாவது வெளியே செல்லலாமா என கேட்கிறார். முதலில் தயங்கிய வானதி பின் ஒப்புக்கொண்டு அவருடன் வெளியே செல்கிறார்.

இருவரும் தங்களது நேரத்தை அழகாக செலவழிக்கின்றனர். வீட்டில் சோழன் நிலாவிற்காக புதிய குக்கர் ஒன்று வாங்கி வந்து கொடுக்கிறார். அப்போது இருவரும் பேச பல்லவன் சோழனிடம் பேச முயற்சிக்கிறார்.

ஆனால் சோழன் பேசாமல் வெளியே செல்ல அப்போது நிலா தடுத்து பேசுங்கள் என்கிறார். பல்லவனும் சோழனிடம் மனதார மன்னிப்பு கேட்க பின் இருவரும் சமாதானம் ஆகிவிடுகின்றனர்.
அவர்கள் பேசிக்கொண்டதை பார்த்து நிலா சந்தோஷப்படுகிறார். கடைசியாக சேரன்-சந்தா காட்சிகள் இடம்பெறுகின்றன.