திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லவன் தனது தோழியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று போலீஸில் சிக்கிய விஷயம் பரபரப்பான கதைக்களமாக சென்றது.
எப்படியோ சேரன் தனக்கு தெரிந்த எம்எல்ஏ உதவியுடன் பல்லவனை வெளியே கொண்டு வந்தார். அவர் தனது தவறை புரிந்துகொண்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.

நிலா, பாண்டியன், சோழன் 3 பேருமே அவரை மன்னிப்பு பேச தொடங்கிவிட்டனர், ஆனால் சேரன் மட்டும் இன்னும் பேசவில்லை, அவர் செய்த தவறு அவனுக்கு புரிய வேண்டும் என்கிறார்.
பல்லவன் செய்த விஷயத்தையே இன்னும் சேரன் மறக்காத, மன்னிக்காத நேரத்தில் சோழன் பணத்தை திருடி கைதாகிவிட்டார்.

அவர் நிலாவால் இப்போது அந்த திருட்டு வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், பாண்டி பல்லவனுக்காக சேரனிடம், அவனிடம் பேசலாமே என்கிறார். ஆனால் சேரன் நானும் அவன் அண்ணன் எனக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என தெரியும் என்கிறார்.
அடுத்து வானதி வீட்டிற்கு வர, நான் போலீஸ் நிலையம் சென்றது குறித்து கேட்க வந்துள்ளாள் என அவரே எல்லா விஷயத்தையும் கூறுகிறார். ஆனால் வானதிக்கு ஒன்றுமே தெரியாததால் முழிக்கிறார், பின் பாண்டி விஷயத்தை கூறியதும் வானதி முன்பு மாதிரி கேவலமாக எதுவும் பேசவில்லை.

அதற்கு மாறாக பாண்டி இப்போது தான் சொன்னான் வருத்தப்படாதீர்கள், எல்லாம் சரி ஆகடும் என நன்றாக பேசுகிறார். கடைசியாக தனது கோவில்பட்டிக்கு சவாரி வந்திருப்பதாகவும், 3, 4 நாள் சுற்றுலா போல என்கிறார்.

சேரன் போய்ட்டு வா நல்லது தானே என கூற 2, 3 நாள் ஆகும் என்று சோழன் யோசிக்கும் நேரத்தில் அவர் எதிர்ப்பார்க்காத ஒரு விஷயத்தை நிலா கூறுகிறார். அதாவது நானும் உங்களுடன் வரட்டுமா என கேட்க சோழனுக்கு செம ஹேப்பி.
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan