வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலில், தான் விரும்பிய நிலா எப்போது சந்தோஷமாக இருக்க வேண்டும், அவருக்கான கனவை நிறைவேற்றி வைக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் சோழன்.
அவர் பணம் கொடுக்காமல் அசிங்கப்பட்டு அழுத நிகழ்வு சோழனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, இதனால் தனது ஓனர் வைத்திருந்த பணத்தை திருடி வந்து நிலாவிடம் கொடுத்து அவரை சந்தோஷப்படுத்தினார்.

ஆனால் அடுத்த நாளே சோழன் திருடிய விஷயம் தெரியவர மிகவும் வருந்தினார் நிலா. அவரை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க தனது தோழிகளிடம் சென்று கொடுத்த பணத்தை வாங்கிவந்த சோழன் ஒனரிடம் கொடுத்த அவரை புகார் வாபஸ் வாங்க வைத்தார்.

புரொமோ
சோழனிடம் மனம் விட்டு பேசிய நிலா அவரது ஓனரிடம் சென்று பேசுகிறார். சோழன் ஓனரிடம் சென்று தான் செய்த தவறுக்கு மனதார வருத்தம் தெரிக்கிறார், அவரும் மன்னித்து நாளை முதல் வேலைக்கு வரக் கூறுகிறார்.
ஆனால் என்ன முன்பு போல் உன்னை நம்ப மாட்டேன், உன் முன் பணம் எண்ண மாட்டேன், கம்போர்ட் துரந்தே வைக்க மாட்டேன், நீ நாளை முதல் வேலைக்கு வர என்கிறார்.

நிலாவுடன் வீட்டிற்கு வந்த சோழன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். நடேசன், நிலாவை பார்த்து இந்த விஷயத்தால் நீ இங்கே இருக்க மாட்டாய், வீட்டைவிட்டு போகிறேன் சொல்லுவ என நினைத்தேன் என்கிறார்.
சோழன் நிலாவிடம் தனியாக மன்னிப்பு கேட்டது, குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டது என தொடர் முடிகிறது.

நாளைய எபிசோடிற்கான புரொமோவில், வானதி வீட்டிற்கு வருகிறார் சோழனை பார்த்த ஹாய் ப்ரோ என்கிறார். உடனே சோழன் எல்லா விஷயமும் தெரிந்து தான் வந்திருக்கிறாள் என மொத்த விஷயத்தையும் கூறுகிறார், ஆனால் பாண்டி சோழன் குறித்து எந்த விஷயத்தையும் வானதியிடம் கூறவில்லை.

சோழன் சொன்னதை கேட்டு ஷாக் ஆன வானதி என்ன செய்யப் போகிறார் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.
பாசத்துக்கு மட்டுமே கட்டுப்படும் டாப் 3 பெண் ராசிகள் - இவர்கள் உறவாக கிடைப்பதே பெரும் வரம்! Manithan
60 வருட திமுக கூட்டணி முறிந்தது - தவெக கூட்டணியில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் IBC Tamilnadu