சந்தா-சேரன் விஷயத்தில் வானதி செய்த யாரும் எதிர்ப்பார்க்காத விஷயம்... அய்யனார் துணை
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களின் பேவரெட் சீரியலாக உள்ளது அய்யனார் துணை.
பல்லவன் மற்றும் சோழனுக்காக போலீஸ் நிலையம் ஏறி இறங்கியபடி இருந்தார்கள் குடும்பத்தினர். தற்போது சோழன் தனக்கு வந்த சவாரி விஷயத்தை வீட்டில் கூற நிலாவும் அவருடன் சென்றுள்ளார்.
2, 3 நாள் அவர்கள் சுற்றுலாவில் இருக்கப்போகிறார்கள். இங்கு வீட்டில் அதற்குள் பிரச்சனை வெடித்துள்ளது.

எபிசோட்
அதாவது சந்தாவின் உறவினர்கள் அவரை அழைத்துசெல்ல சென்னைக்கு வர சேரன் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.
முதலில் அந்த வீட்டில் அவர்கள் இருக்க வேண்டும் என சந்தா மற்றும் சகோதரரை வெளியே அனுப்புகிறார்கள் பாண்டி மற்றும் சேரன்.

பின் சந்தா உறவினர்கள் வீட்டிற்கு வந்து தேட பாண்டி என்னென்னமோ சொல்லி அவர்களை முதலில் சமாளிக்கிறார். பின் ரோட்டில் சந்தாவை பார்த்த வானதி சட்டென ஒரு யோசனை செய்கிறார்.

அதாவது சந்தாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுகிறார், அதனை கேள்விப்பட்டதும் சேரன் மற்றும் பாண்டி முதலில் சந்தோஷப்படுகிறார்கள். இந்த எபிசோடை பார்த்த ரசிகர்களும் வானதியா இது, சூப்பர் என கமெண்ட் செய்கிறார்கள்.