திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட்
அய்யனார் துணை
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல்.
கொஞ்சம் பிரச்சனை, நிறைய கலாட்டா, பாசம், கொண்டாட்டம் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த தொடர் கதைக்களம் அமைய ரசிகர்கள் அதிகமாக சீரியலுக்கான ஆதரவை கொடுக்கிறார்கள்.

இப்போது கதையில் நிலாவிறகு ராகவ் கொடுத்த தொல்லையால் போலீஸில் பிரச்சனை, அதனால் வேறு வேலை பார்க்கிறார். பாண்டி பெண் பார்க்க வராததால் வானதி அவரிடம் பேசாமல் இருக்கிறார்.

இவர்களை தாண்டி பல்லவன் சேரனிடம் தேர்விற்கு பணம் கட்ட வேண்டும் என ரூ. 2000 வாங்கிக்கொண்டு புதிய தோழியுடன் கடைக்கு சென்று சாப்பிடுகிறார், அவரைப்பற்றி எப்போது வெளிவரும் என தெரியவில்லை.
எபிசோட்
இன்றைய எபிசோடில், சந்தாவின் அண்ணன், சோழன்-நிலா பெண் பார்க்க வந்த விஷயத்தை சேரனிடம் கூறுகிறார். பாண்டி வானதியிடம் பேச அவர் வீட்டிற்கு செல்கிறார், போன் செய்து பார்க்கிறார் ஒன்றும் நடக்கவில்லை.

அடுத்து நிலா ஆபிஸில் ராகவ் அவரை அழைத்து வேறு வேலை தேடுகிறீர்களா, இங்கே வேலை செய்ய என்ன பிரச்சனை. இந்த தொழில் ஒரு வருடம் கூட ஒரு அலுவலகத்தில் பணிபுரியவில்லை என்றால் பிரச்சனை.
எப்படி உங்களால் வேறு வேலை தேட முடியும் என நிறைய கேள்விகள் கேட்கிறார், நிலாவும் இங்கு என்ன பிரச்சனை என உங்களுக்கே தெரியும், என்னால் இங்கு வேலை செய்ய முடியவில்லை என்கிறார்.

மேலும் ராகவ் கொஞ்சம் நக்கலாக பேச நிலா கோபத்தில் தனது ஐடி கார்டை ராவிடம் போட்டுவிட்டு ஆபிஸில் இருந்து கிளம்பிவிடுகிறார்.

இந்த விஷயத்தை சோழனை சந்தித்து நிலா கூறி கதறி அழுகிறார். இது நல்ல கம்பெனி, ராகவ் மட்டும் ஒழுங்காக இருந்தால் இங்கே நான் நன்றாக வேலை செய்து என்னை நிரூபித்திருப்பேன் என கதறி அழ அவர் அழுவதை கண்டு சோழனும் அழுகிறார்.

அதைப்பார்த்த நிலா நீங்கள் அழுகிறீர்களா என கேட்க, சோழன் நீங்கள் அழுதால் எனக்கும் அழுகை வருகிறது என்கிறார்.
பின் உடனே நிலா கண்ணீரை துடைத்துக்கொண்டு சுதாரிக்கிறார், அடுத்து சோழன் நிலாவை சமாதானம் செய்யும் வகையில் மிகவும் பாசிட்டீவாக பேசுகிறார்.