அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட்
அய்யனார் துணை
வழக்கமான சீரியல் என இல்லாமல் மக்கள் எப்படியெல்லாம் கதை அமைய வேண்டும் என நினைப்பார்களோ அப்படி அய்யனார் துணை சீரியல் கதை உள்ளது.
ராசியே இல்லாத வீடு, பெண்கள் வாழ முடியாத ஒரு மோசமான வீடு என சொல்லப்பட்ட அய்யனார் துணை வீட்டிற்கு தேவதை போல் சோழனின் மனைவியாக அய்யனார் துணை வீட்டிற்கு வந்தவர் தான் நிலா.
ஆனால் அவரது திருமணமே ஒரு பெரிய போராட்டத்திற்கு இடையில் தான் நடந்தது, முதலில் திருமண வாழ்க்கையை அவர் ஏற்கவில்லை என்றாலும் பின் மனம் மாறி நன்றாக வாழ ஆரம்பித்தார்.

எபிசோட்
சோழனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட நிலாவிற்கு நீதிமன்றத்தில் ஒரு ஷாக்கிங் விஷயம் தெரிய வந்தது. சோழன் போலிஸ் நிலையத்தில் சொன்ன பொய்கள் தான் திருமணம் ஆனதற்கே காரணம் என்பதை தெரிந்துகொண்ட நிலா விவாகரத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.

இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த நிலா சோழன் என்னவெல்லாம் பொய் சொல்லி தன்னை திருமணம் செய்தார் என்பதை வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கூறுகிறார். என்ன சொல்வது என தெரியாமல் நடேசன், சேரன், பாண்டி, பல்லவன் என அனைவரும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள்.

நிலா வீட்டைவிட்டு கிளம்புகிறேன் என கூற சேரன் வேண்டாம் பா என்கிறார்.
உடனே நிலா, இதுபோல் உங்கள் வீட்டுப் பெண்ணை யாராவது ஏமாற்றி திருமணம் செய்தால் என்ன செய்வீர்கள் என கேட்க சேரன் ஆடிப்போகிறார்.