போலீஸிடம் கார்த்திகா கூறிய விஷயம், பதற்றத்தில் நிலா, சேரன் தப்பிப்பாரா.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கப்பட்ட ஒரு சீரியல் அய்யனார் துணை.
நிலா என்ற பெண் தனது வீட்டிற்கு கார் ஓட்ட வந்தவரை திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது.
எதிர்ப்பாரா விதமாக இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் அவரின் வீட்டில் அனைவரும் நிஜ திருமணம் என நினைத்து உரிமையோடு கொண்டாடுகிறார்கள்.
வித்தியாசமான கதையாக இருப்பதால் மக்களின் ஆதரவும் கிடைத்து வருகிறது.
இன்றைய எபிசோட்
கார்த்திகாவிடம் தவறாக சேரன் நடந்துகொண்டதாக பெண்ணின் அப்பா போலீஸில் புகார் அளிக்க 4 அண்ணன்-தம்பிகள் கைது செய்யப்படுகிறார்கள்.
நடந்தது என்ன என தெரிந்த நிலா போலீஸ் அதிகாரியிடம் பேசி கார்த்திகா வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
கார்த்திகா போலீசிடம் என்ன நடந்தது என்பதை தெளிவாக கூற பின் சேரன் மற்றும் அவரது தம்பிகள் வெளியே வருகிறார்கள். இன்றைய எபிசோடில் 4 பேரும் வெளியே வருகிறார்கள், நிலாவும் சந்தோஷப்படுகிறார்.