நிலா விவாகரத்து கேட்டதற்கு பின் இப்படி ஒரு உண்மை காரணமா?... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்

By Yathrika May 09, 2026 06:27 AM GMT
Report

அய்யனார் துணை

அண்ணன்-தம்பிகளுக்கு திருமணம் என்பதே ராசியில்லாத விஷயமாக அய்யனார் துணை சீரியலில் இப்போது கதைக்களம் செல்கிறது.

முதலில் நிலா வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தில் இருந்து தப்பிக்க சோழனுடன் வெளியே வர எதிர்ப்பாராத விதமாக திருமணம் நடந்தது. அவர் அய்யனார் துணை வீட்டிற்கு வந்த பிறகு அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கையும் மாற அந்த குடும்பத்தில் ஒருவராகவே நிலா மாறிவிட்டார்.

சேரன் சந்தா திருமணம் பணம் சம்பாதித்தால் தான் நடக்கும், இன்னொரு பக்கம் வானதி பாண்டி திருமணம் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் நிலா சோழன் விவாகரத்து வழக்கு வேறு வந்துவிட்டது.

நிலா விவாகரத்து கேட்டதற்கு பின் இப்படி ஒரு உண்மை காரணமா?... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் | Ayyanar Thunai Serial May 9 Episode

எபிசோட்

வீட்டில் சேரன் நிலாவிடம் விவாகரத்து வேண்டாம், நீ சோழனுடன் வாழ வேண்டும் என்கிறார், அதற்கு நிலா நானும் அவருடன் வாழலாம் என முடிவு எடுத்துவிட்டேன் என்கிறார்.

நீதிமன்றம் வந்த இடத்தில் சோழன் திருமணத்தின் போது செய்த விஷயம் நிலாவிற்கு தெரிய வருகிறது. அதாவது நிலா விட்டுப் பிரச்சனையில் சோழனுடன் ஓடிவந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

நிலா விவாகரத்து கேட்டதற்கு பின் இப்படி ஒரு உண்மை காரணமா?... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் | Ayyanar Thunai Serial May 9 Episode

அப்போது பிரச்சனையை போலீசாரால் சுமூகமாக முடித்துவிட முடியுமாம், ஆனால் சோழன் நாங்கள் காதலிக்கிறோம், எங்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என பொய் கூறியதால் தான் அவர்களுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நிலா விவாகரத்து கேட்டதற்கு பின் இப்படி ஒரு உண்மை காரணமா?... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் | Ayyanar Thunai Serial May 9 Episode

இந்த விஷயத்தை அறிந்து நிலா செம ஷாக் ஆகிறார், அதனாலேயே ஜட்ஜ் முன்பு விவாகரத்து வேண்டும் என கூறுகிறார். இனி கதையில் என்ன நடக்கப்போகிறதோ என்பதை அடுத்த வாரம் காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US