பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
மனைவியானவரை காதலித்து அவர் மனதில் இடம் பிடித்துவிட வேண்டும் என போராடுகிறார் சோழன். நிலாவும் காதல் உள்ளதா இல்லையா என வெளியே காட்டாமல் உள்ளார்.
ஆனால் அய்யனார் துணை வீட்டின் மருமகள் என்ற உரிமையில் எல்லா விஷயங்களையும் செய்கிறார், சோழனை மட்டும் கணவராக ஏற்றுக்கொண்டாரா என எதுவும் சொல்லவில்லை. கடைசியாக ராகவிற்கு மோசமாக மெசேஜ் அனுப்பியதால் சோழனிடம் இருந்து விலக வேண்டும் என கோபமாக கூறினார்.

எபிசோட்
தற்போது ஒளிபரப்பாகும் எபிசோடில், பணம் இல்லாத காரணத்தால் அசிங்கப்படுத்தப்பட்ட நிலாவை தலை நிமிர வைக்க வேண்டும் என சோழன் ஒரு காரியம் செய்தார். அதாவது தனது ஓனர் வைத்திருந்த பணத்தை திருடி நிலா தோழிகளிடம் கொடுத்து அப்போதைக்கு பிரச்சனையை முடித்தார்.

இன்றைய எபிசோடில், சோழன் ஓனரிடம் இருந்து பணம் திருடிய விஷயம் தெரியவர அவரை போலீஸில் புகார் அளித்து கைது செய்ய வைக்கிறார். இந்த விஷயம் சேரன்-நிலாவிற்கு தெரியவர இருவரும் ஷாக் ஆகிறார்கள்.

தற்போது வந்துள்ள அய்யனார் துணை புரொமோவில், பணம் திருடியதால் போலீஸ் நிலையத்தில் அடிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கிறார் சோழன். அதைப்பார்த்த நிலா பதறிப்போய் தனது தோழியிடம் சென்று கொடுத்து ரூ. 5 லட்சத்தை மீண்டும் வாங்கிவந்து ஓனரிடம் கொடுக்கிறார்.
பணம் வைக்கு வந்ததால் அவர் சோழன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குகிறார்.

பின் சோழனிடம் எனக்காக நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் கஷ்டப்பட வேண்டும், யாரோ ஒருத்தர் என்னை ஏதோ சொன்னால் இந்த அளவிற்கு செய்ய வேண்டுமா இனி இதுபோல் செய்யாதீர்கள் என்கிறார். நிலா பேசுவதை பார்க்கும் போது கண்டிப்பாக பிப்ரவரி 14 சோழனிடம் காதலை சொல்லிவிடுவார் என்று தான் தெரிகிறது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan