பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ
அய்யனார் துணை
கல்யாணம் என்று வந்தாலே எல்லா சீரியல்களிலும் ஏதாவது பிரச்சனையாக கதைக்களம் வைத்துவிடுகிறார்கள்.
அப்படி அய்யனார் துணை சீரியலில் சேரனின் திருமணம் பலமுறை தடைப்பட்டுள்ளது. ஆனால் கடைசியாக சந்தாவுடன் சேரனுக்கு திருமணம் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் கடைசியில் சந்தாவின் உறவினர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டி அவரை அழைத்துச் சென்றுவிட்டனர்.

புரொமோ
சோழன் பிரச்சனை முடிவடைய இப்போது சேரன் திருமணத்திற்கு வந்துவிட்டனர். சந்தாவை தேடி சேரன், சோழன், நிலா 3 பேரும் பீகார் கிளம்புகிறார்கள்.
அங்கு சந்தா அப்பா சேரனுக்கு தனது மகளை திருமணம் செய்துகொடுக்க முடியாது என்கிறார். சந்தாவிற்கு பார்த்திருப்பவர் சொத்து எல்லாம் வைத்துள்ளார் என்கிறார், சேரனிடம் ஒரு சொத்தோ, பணமோ எதுவும் இல்லை என்கிறார்.

உடனே சோழன் ஒரு 6 மாதம் டைம் கொடுங்கள், அதற்குள் எனது அண்ணன் ரூ. 25 லட்சம் பணமும், 25 சவரன் நகையோடும் வருவார், அப்போது திருமணம் செய்து வைப்பீர்களா என்கிறார். அதற்கு சந்தா அப்பா என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.