திருமணம் முடிந்த பிறகு சோழனிடம் நிலா சொன்ன முக்கியமான விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
கல்யாணம் ஆஹா கல்யாணம் என கோலாகலமாக அய்யனார் துணை சீரியலில் சோழன்-நிலா திருமணம் அமர்க்களமாக முடிந்துவிட்டது.
திருமணத்தில் நிலா அப்பா-அம்மா, அண்ணன் இருந்ததால் அவர்கள் ஏதாவது பிரச்சனை செய்து நிலாவை அழைத்துச் சென்றுவிடுவார்களோ என தாலி கட்டும் வரை சோழன் பயந்துகொண்டே இருந்தார்.

ஆனால் நிலா இது நாம் விரும்பி செய்துகொள்ளும் திருமணம், சந்தோஷமாக இருங்கள் என கூற சோழன் மாப்பிள்ளை கெத்து காட்டினார். திருமணம் முடிந்ததும் நிலா அண்ணன் சோழனுக்கு செயின் போட சொன்னால் அவரது காதில் மாட்டிவிட்டு சென்றார்.
இதனால் அங்கே கொஞ்சம் அனைவரும் வருத்தப்பட்டார்கள், ஆனால் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.
புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின புதிய புரொமோ வெளியானது. அதில் நிலா-சோழனின் முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் அறைக்குள் இருக்கும் போது நிலா சோழனிடம், நமக்கு திருமணம் நடந்துவிட்டது.

நான் உங்கள் மனைவி, இனி முன்பு போல் இருக்க முடியாது.
நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள், எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது எல்லாம் எனக்கு தெரிய வேண்டும் என கூறுகிறார். இதோ புதிய புரொமோ,