சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியல் விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அட்டகாசமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்.
கடந்த எபிசோடுகளில், சோழனிடம் போட்ட சவாலில் ஜெயிக்க மனோகர் தனது மகள் நிலா மீது பாசமாக இருப்பது போல் நடித்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார். நிலாவும் தனது குடும்பமே பாசமாக இருப்பதை பார்த்து சந்தோஷமாக இருக்கிறார்.

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
ஆனால் அவர் இல்லாத நேரத்தில் சோழனை மனோகர் மற்றும் தாஸ் அடிமையாக நடத்தினார்கள்.
கடைசியாக ஒரு பிளான் போட்டு சோழன் மீது திருட்டு பழியை போடுகிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோடில் சோழனை எப்படியோ காப்பாற்றி விடுகிறார்கள் அவரது அண்ணன்-தம்பிகள்.
பின் வீட்டிற்கு வந்த சோழன் யாரோ பணத்தை எடுத்துக்கொண்டு என்னை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார்.
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், சோழன் மனோகர் ஏற்பாடு செய்த அடியாட்களை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
பாண்டியன் அந்த நபரை அழைத்து வர பல்லவன் இதற்கு உங்கள் அப்பா தான் காரணம் என எல்லா உண்மையையும் கூற நிலா அப்படியே ஷாக் ஆகிறார்.