அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன.. வெளிவந்த படப்பிடிப்பு தள போட்டோ
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் கெத்து காட்டி வந்த விஜய் டிவி இப்போது நிறைய வெற்றிகரமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அப்படி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும், கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று தான் அய்யனார் துணை. 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது கதையில் பல்லவன் ஆசைப்பட்டு பேச போன ஒரு பெண் சோழனிடம் பேச விரும்பியதாக கூற கதையே மாறியது. அதாவது நிலாவை வெறுப்பேற்ற சோழன் காயத்ரி என்ற பெண்ணிடம் பேசுவது போல் வெறுப்பேற்றுகிறார்.
சோழன் அந்த பெண்ணிடம் பேசுவது நிலாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

இன்னொரு பக்கம் வானதி கேட்டுக் கொண்டதற்காக ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பெண்ணை திருமணம் செய்ய சேரன் ஒப்புக்கொள்கிறார். இந்த விவரத்தை அறிந்த மற்ற தம்பிகள், நிலா மற்றும் நடேசன் ஷாக் ஆகிறார்கள்.

அடுத்து என்ன
அய்யனார் துணை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தற்போது படப்பிடிப்பு தள போட்டோ வெளியாகியுள்ளது.
அதாவது நிலா மற்றும் சோழன் இருவரும் ஷாப்பிங் சென்றுள்ளதாக தெரிகிறது. அதில் சோழன் முகமே சரியில்லை, என்ன நடந்திருக்கும், என்ன காட்சி என்பதை பொறுத்திருந்து காண்போம்.