சோழன்-நிலா ஹனிமூனிற்காக எங்கே சென்றுள்ளார்கள் தெரியுமா?... வெளிவந்த போட்டோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில், சோழன்-நிலா ஹாலில் உட்கார்ந்து கொஞ்சிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து திடீரென பல்லவன் வந்துவிடுகிறார், பிறகு 3 பேரும் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஜாலியாக இருக்கிறார்கள்.

வீட்டிற்கு வந்த சேரன் கார்த்திகா நிலைமை நினைத்து கஷ்டப்படுகிறார். அவரின் வாழ்க்கை பற்றி நிலா, பல்லவனிடம் ஷேர் செய்து வருத்தப்படுகிறார்.
அதேபோல் சந்தாவிடமும், கார்த்திகா விஷயத்தை கூறி வருத்தப்படுகிறார்.
கடும் பயத்தில் புலம்பிய நந்தினி, குடும்ப நபர் சொன்ன விஷயத்தால் எமோஷ்னல் ஆன ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
போட்டோ
கடைசியாக எபிசோடில், நிலா சோழனிடம் ஒரு விஷயம் கேட்டார், வேறென்ன ஹனிமூன் கூட்டிச் செல்கிறீர்களா என கேட்டார், உடனே சோழனும் எனக்கும் இந்த யோசனை இருந்தது.

ஆனால் இதுபற்றி கேட்டால் கோபப்படுவியோ, அடிப்பியோ என பயந்து கேட்காமல் இருந்தேன் என்கிறார். நிலாவே கேட்டதால் சோழனும் ஹன்மூன் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
தற்போது அய்யனார் துணை படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. அதாவது ஹனிமூனிற்காக சோழன்-நிலா இருவரும் கொடைக்கானல் சென்றுள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ,