நிலா செய்த காரியம் கண்ணீர் விட்டு அழுத பல்லவா.. அய்யனார் துணை எமோஷ்னல் புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் சில புதுமுகங்களும், நாம் இதற்கு முன் தொடர்களில் பார்த்த சிலரும் நடிக்க சமீபத்தில் தொடங்கியது தான் அய்யனார் துணை.
4 அண்ணன்-தம்பிகளின் அப்பாவுடன் பல பிரச்சனைகளுக்கு இடையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் எதிர்ப்பாரா விதமாக ஒரு பெண் வருகிறாள், அவளால் வீட்டில் பல மாற்றங்கள் நடைபெறுகிறது.
4 அண்ணன்-தம்பிகள் அவரின் வருகையால் தங்களது வாழ்க்கையில் மாற்றத்தை காண்கிறார்கள்.
புரொமோ
நிலா எதிர்ப்பாரா விதமாக திருமணம் செய்து வீட்டிற்குள் வந்து ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் தற்போது சந்தோஷமாக வாழ பழகுகிறார்.
அவர் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்ய அதைப்பார்த்த பல்லவா, எங்களது வீட்டில் இப்படியெல்லாம் நடக்காதா என கஷ்டப்பட்டிருக்கிறோம் என எமோஷ்னல் ஆகிறார். இதோ அந்த புரொமோ,