நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம்
அய்யனார் துணை
அய்யனார் துணை, ஆரம்பத்தில் என்ன கதை இது என ரசிகர்கள் யோசிக்க இப்போது மக்கள் ஆர்வமாக பார்க்கும் சீரியலாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக சேரன்-கார்த்திகா திருமணம் நடக்குமா இல்லையா என்ற பெரிய கேள்வி இருந்துவந்த நிலையில் அதற்கு பதிலும் கிடைத்துவிட்டது.
சேரனும் தான் ஆசைப்பட்ட பெண் அவர்கள் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் சந்தோஷமாக வாழட்டும் என ஆசீர்வதித்துவிட்டார்.
அடுத்த வாரம்
இந்த வார கடைசி எபிசோடில் சோழன், நிலாவின் அப்பாவை எதர்சையாக சவாரி கொண்டு செல்கிறார்.
அப்போது நிலாவின் அப்பா இன்னும் ஒரு வாரத்தில் எனது மகளை எனது வீட்டிற்கு அழைத்து செல்வேன் என சவால் விடுகிறார். பின் எபிசோட் முடிவில், அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியாகிறது.
அதில் நிலாவின் அப்பா சேரன் வீட்டிற்கு வருகிறார், அவரை பார்த்து நிலா செம சந்தோஷப்படுகிறார். தனது அப்பா வீட்டிற்கு அழைத்ததும் நிலா அவருடன் சென்றுவிடுவாரா, அங்கு போனால் கண்டிப்பாக பிரச்சனை தான்.
அப்பா அழைப்பை மறுத்து இங்கேயே இருக்கப்போகிறாரா, சவாலில் யார் ஜெயிப்பார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.