மோசமாக அடித்து உதைத்த அம்மா, அண்ணன், பாண்டிக்காக வானதி எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை அதிரடி புரொமோ
அய்யனார் துணை
விஜய் டிவியில் சீரியல் என்றால் இதுதான்டா செம சூப்பர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக உள்ளது அய்யனார் துணை.
வழக்கமான கதைக்களமாக இல்லாமல் இளசுகள் அதிகம் நடிக்க செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோட் கதையில் நிலாவை வானதி அண்ணன் கிண்டல் செய்ததால் சேரன், சோழன் எல்லாம் அடிக்க அது பெரிய பிரச்சனை ஆனது.
வானதி குடும்பம், நிலா குடும்பம் இருவருக்குள்ளும் பெரிய வாக்குவாதம் நடக்க சேரன்-சோழன் பக்கம் தான் ஜெயித்தார்கள்.
இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில் சேரன் நாங்கள் இந்த வீட்டைவிட்டு வெளியேறலாம் என நினைக்கிறோம், எல்லோரும் தவறாக பேசுகிறார்கள் என நிலாவிடம் கூற அவரோ சோழன் சொன்னதை போலவே கூறுகிறார்.
ஒருவர் சொல்வதை போல கேட்டால் பிறகு ஒவ்வொருவருக்காக மாற வேண்டும் இப்படியெல்லாம் யோசிக்காதீர்கள் என்கிறார்.
அடுத்து பாண்டி மற்றும் சோழன், வானதி பார்க்க அவரது வீட்டுப் பக்கம் செல்கிறார்கள். எப்படியோ வானதி பாண்டியை பார்த்து விடுகிறார், அவரை கட்டியணைத்துக் கொள்கிறார்.
இதனை வானதி அண்ணன் பார்க்க பெரிய பிரச்சனை ஆகிறது.
அடுத்த வாரம்
வானதி பாண்டியை கட்டிபிடித்துக்கொண்டு இருந்த விஷயம் அவரது அம்மாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்த செமயாக அடிக்கிறார். இதனால் வானதி எனக்கு பாண்டியை பிடித்திருக்கிறது அவரை தான் திருமணம் செய்வேன்.
இந்த வீட்டில் இருந்தால் அது நடக்காது என வீட்டைவிட்டு வெளியே வருகிறார்.

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
