சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, இளசுகளை கவர்ந்த மிகவும் ஹிட்டான ஒரு தொடர்.
2025, இந்த வருடத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது. வித்தியாசமான கதையுடன் அடுத்தடுத்து தரமான கதைக்களத்துடன் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடைசியாக கதையில் பாண்டியன்-வானதி காதல் பிரச்சனைகள் தான் ஓடியது. அடுத்து நிலா, சேரனுக்கு திருமணம் செய்துவைக்கும் விஷயத்தை கையில் எடுத்துள்ளார்.
இன்றைய எபிசோட்
சேரனுக்கு ஜாதகம் உள்ளதா என்ற டாக் போகிறது. ஆனால் யாருக்குமே ஜாதகம் இல்லை என நடேசன் கூற சோழன் ஒரு ஐடியா கொடுக்கிறார்.
அதாவது எல்லாம் நன்றாக இருப்பது போல ஒரு ஜாதகம் ரெடி செய்தால் என்ன என கூற அதற்கு ஏற்பாடு நடக்கிறது.
அடுத்த வாரம்
அய்யனார் துணை கதைக்களத்தின் அடுத்த வார புரொமோவில், சேரனை பார்க்க பெண் வீட்டார் வீட்டிற்கு வருகின்றனர்.
அவர்களுடன் வந்தவர் சேரன் ஜாதகத்தை பார்த்து இவர் இருக்கும் வீட்டில் எந்த பெண்ணும் இருக்க முடியாது. அவருடன் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்காது, இவரால் தான் பிரச்சனை என்கிறார்.
இதனை கேட்ட சேரன் மனம் உடைந்து கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார். விஷயம் அறிந்த நிலா மற்றும் தம்பிகள் பதறுகிறார்கள்.