நகையை தொலைத்த சோழனுக்கு மீண்டும் கிடைத்த வளையல், எப்படி தெரியுமா?.. அய்யனார் துணை சீரியல் எபிசோட்
அய்யனார் துணை
விஜய்யில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலின் கதைக்களத்தின் நேற்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக சென்றது.
நிலா தனது கையில் இருந்து வளையலை சந்தாவிற்காக கொடுத்ததால் அவருக்கு வளையல் வாங்கி தந்தே ஆக வேண்டும் என சோழன் ஒரு முடிவோடு இருக்கிறார். அந்த கனவை நிறைவேற்றும் வகையில் தனது ஓனர் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு சோழனுக்கு கிடைக்க அதை பயன்படுத்திக் கொள்கிறார்.

அதனால் சோழனுக்கு ஒன்றரை லட்சம் பணம் கிடைக்க அதை அப்படியே எடுத்துச்சென்று நிலாவிற்காக வளையல் வாங்குகிறார்.
அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவருக்கு ஒரு அதிர்ச்சி, அதாவது அந்த பையில் வளையலே இல்லை. நிலாவிற்காக வாங்கியது தொலைந்து போக சோழன் தனது நிலையிலே இல்லை, பதற்றமாக தேடுகிறார்.

சவாரி விட்டவர்களின் வீட்டிற்கு சென்று அங்கு கேட்டபோதும் நகை இல்லை என கூறிவிட்டனர்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், சோழன் தனது முதலாளியை அழைத்துக்கொண்டு நகைக்காக தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் நகை சென்ற இடமே தெரியவில்லை என சோழன் கதறி கதறி அழுகிறார்.

சோழன் இப்படி அழுவதை பார்த்த அவரது முதலாளியே கொஞ்சம் எமோஷ்னல் ஆகிவிட்டார். சோழன் தவித்துக் கொண்டிருக்கும் போது திடீரென சவாரி இறக்கிவிட்டவர் வந்து நகையை காட்ட அவர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.
இதற்கு இடையில் சோழனை கலாய்ந்த, பாண்டி மற்றும் பல்லவனை வெளுத்து வாங்குகிறார் நிலா.
பின் நகையுடன் வீட்டிற்கு வந்து நிலாவிற்கு போட்டுவிட்டு சந்தோஷப்படுகிறார் சோழன், மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகிறார்கள்.