கொடுக்க முடியாது என்ற சந்தா, சோகத்தில் வீட்டைவிட்டு கிளம்பிய பல்லவன்... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
பாசத்தை கொட்டும் அண்ணன்-தம்பிகளின் கதையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அய்யனார் துணை.
கடந்த சில வாரங்களாக சேரனுக்கும் சந்தாவிற்கும் திருமணம் முடிந்த பிறகு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து கதை செல்கிறது. சேரனை திருமணம் செய்து வந்ததில் இருந்து சந்தா அந்த வீட்டை தனது கைக்குள் கொண்டு வர எல்லா வேலைகளையும் செய்கிறார்.

முதலில் சமையல் அறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார், யாரையும் உள்ளே விடுவதில்லை.
அடுத்து வீட்டின் செலவுகளை பார்க்கலாம் என நிலா கணக்கு செய்து கொண்டிருந்த போது திடீரென எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரே முடிவு எடுத்தார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், சோழன் இரவு சவாரி முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார், உடனே அடுத்த சவாரிக்கு ஓகே கூற நிலா அவரை திட்டி ஓய்வு எடுக்க கூறுகிறார்.
பின் சந்தா நிலாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறார், அங்கு கார்த்திகா வர 3 பேருமே என்ன பேசுவது என தெரியாமல் நிற்கிறார்கள். கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வர பல்லவன் கிளாஸ் செல்ல பணம் கேட்கிறார்.

சேரன் பல்லவனுக்கு ரூ. 1000 கொடு என சந்தாவிடம் கூற அவரோ எந்த செலவும் இல்லை ரூ. 300 போதும். நேற்று தான் பெட்ரோல் போட்டார், சாப்பாடு இங்கே இருந்து எடுத்துக்கொண்டு செல்கிறார் பின் எதற்கு ரூ. 1000 என கூறுகிறார்.

சந்தா கேட்ட கேள்வியால் சோகத்தில் அந்த ரூ. 300 கூட வேண்டாம் என வீட்டைவிட்டு கிளாஸ் கிளம்புகிறார் பல்லவன்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்த சேரன் சந்தாவை அழைத்து ஏன் இப்படி கூறுகிறாய் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார், வழக்கம் போல் அதற்கும் அழுகிறார்.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிலை - பிரித்தானிய நிதி அமைச்சர் எச்சரிக்கை News Lankasri