நல்லவர் போல் பேசி கார்த்திகாவை துடிக்க துடிக்க பழிவாங்கிய சந்தா... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்

By Yathrika Oct 15, 2026 05:10 AM GMT
Report

அய்யனார் துணை

பரவாயில்லை பா, தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கும் அளவிற்கு நன்றாக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடுவது அய்யனார் துணை சீரியல். 

இப்போது கதையில் சந்தா வீட்டில் செய்யும் விஷயங்கள் தான் பரபரப்பாக செல்கிறது. அவரது அம்மா சொன்னது போல் வீட்டை தனது கட்டுப்பாட்டில் வைக்க கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தி வருகிறார்.

நல்லவர் போல் பேசி கார்த்திகாவை துடிக்க துடிக்க பழிவாங்கிய சந்தா... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் | Ayyanar Thunai Serial Oct 15 Episode

அவர் செய்வது ஏதாவது சரியில்லை என்று கேட்டாலே உடனே ஒரு அழுகையை போட்டு சேரன் மனதை மாற்றிவிடுகிறார். கடைசியாக அவர் பல்லவன் விஷயத்தில் செய்தது யாருக்குமே பிடிக்கவில்லை.

இந்த நேரத்தில் சந்தாவின் குடும்பம் மீண்டும் வீட்டிற்கு வரப்போகிறார்கள், அவர்கள் வந்தால் என்னென்ன பிரச்சனை வரப்போகிறதோ தெரியவில்லை.

எபிசோட்

இன்றைய எபிசோடில், சந்தா-சேரன் கர்ப்பமாக இருப்பதாக கூறி தான் திருமணத்திற்கு பெற்றோர்களை சம்மதிக்க வைத்தார்கள். 3வது மாதத்தில் செய்யும் விஷயங்களுக்காக சந்தா குடும்பத்தினர் வருகிறார்கள்.

நல்லவர் போல் பேசி கார்த்திகாவை துடிக்க துடிக்க பழிவாங்கிய சந்தா... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் | Ayyanar Thunai Serial Oct 15 Episode

தற்போது நிலா, சோழன், பாண்டி, பல்லவன் உண்மையை அவர்களிடம் கூறிவிடலாம் என முடிவு எடுத்துள்ளார்கள்.

அடுத்து சேரன்  வெளியே நின்றுகொண்டிருந்த போது கார்த்திகா அவர்களின் வீட்டின் வழியில் வேறொருவரின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது சேரன் கார்த்திகாவை அழைத்து பேச அதை சந்தா கவனிக்கிறார்.

நல்லவர் போல் பேசி கார்த்திகாவை துடிக்க துடிக்க பழிவாங்கிய சந்தா... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் | Ayyanar Thunai Serial Oct 15 Episode

அவருக்கு இது பிடிக்கவில்லை ஆனால் வெளியே கூறவில்லை. எதையும் தவறாக எடுத்துக்கொள்ளாதவர் போல் சந்தாவை வீட்டிற்குள் அழைத்து வரும் சந்தா சுட சுட அடுப்பில் இருக்கும் குலோப் ஜாமூனை கார்த்திகா வாயில் போடுகிறார்.

நல்லவர் போல் பேசி கார்த்திகாவை துடிக்க துடிக்க பழிவாங்கிய சந்தா... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் | Ayyanar Thunai Serial Oct 15 Episode

சுடால் வலி தாங்க முடியாமல் கார்த்திகா துடிக்கிறார், ஆனால் தெரியாமல் போட்டுவிட்டேன் என சந்தா சாதாரணமாக கூறுகிறார். நிலா சத்தம் கேட்டு வர வலி தாங்க முடியாமல் கார்த்திகா வெளியே செல்ல சந்தா நான் இனிப்பு கொடுத்தேன் பிடிக்காமல் துப்பிவிட்டு செல்கிறார் என்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US