தாலி கட்டவரும் நேரத்தில் வானதி சொன்ன விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்
அய்யனார் துணை
அய்யனார் துணை, எங்களின் பேவரெட் சீரியல் என ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் அளவிற்கு சீரியல் பெரிய வரவேற்பு பெறுகிறது.
குடும்ப பாங்கான கதை என்றாலும் வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் நடேசன் தனது குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு செல்ல அங்கு பயம் இருந்தாலும் குடும்பத்திற்காக என நினைத்து நிலா தீச்சட்டி எடுத்து பரிகாரம் செய்கிறார்.

இதனால் சேரன் மற்றும் தம்பிகள் அனைவருமே கஷ்டப்பட்டார்கள். இதற்கு இடையில் வானதி அண்ணன் கோவிலில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்துவிடுகிறார்.
அம்மா-அப்பா பொங்கல் வைக்க வேண்டும் என கோவிலுக்கு அழைத்து செல்ல வானதியும் சென்றுவிடுகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில் வானதி எவ்வளவோ முரண்டு பிடித்தும் கேட்காத அவரது அண்ணன் இழுத்துக்கொண்டு சென்று மாப்பிள்ளை பக்கத்தில் உட்கார வைக்கிறார்.
வானதி தனக்கு திருமணத்திற்கு விருப்பம் இல்லை என புலம்பியபடி இருந்தாலும் யாரும் கேட்பதாக இல்லை.

கடைசியில் தாலியை எடுத்து வானதி கழுத்தில் வைக்க உடனே அவர் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இப்போதே மருத்துவமனை செல்லலாம் வாருங்கள் ஸ்கேன் எடுப்போம் என கூற அவரது அம்மா திருமணம் நிறுத்த வேண்டும் என பொய் சொல்லாதே என்கிறார்.
ஆனால் வானதி நான் சொல்வது நிஜம் தான், பாண்டிக்கு கூட போன் செய்து கேளுங்கள் என்கிறார், இதனால் கல்யாணம் நிறுத்தப்படுகிறது.