திடீரென வந்த போன் கால், பாண்டியை பளார் விட்ட சேரன்... அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்
அய்யனார் துணை
அய்யனார் துணை, அண்ணன்-தம்பிகளை வைத்து அழகான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் தொடர்.
கதையில் இப்போது நடேசன் குடும்பத்தினர் குல தெய்வ கோவிலுக்கு முதன்முறையாக சென்றுள்ளனர். பாண்டி ஊரில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு வானதி அண்ணன் தங்கைக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.

ஆனால் திருமணத்தில் இருந்து தப்பிக்க வானதி நான் கர்ப்பமாக இருக்கிறேன், பாண்டியின் குழந்தையை தான் வயிற்றில் சுமக்கிறேன் என கூற திருமணம் முடிந்துவிட்டது.

எபிசோட்
சீரியலின் இன்றைய எபிசோடில், வானதி அண்ணன், பாண்டிக்கு போன் செய்து கோபத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி திட்டுகிறார். ஆனால் பாண்டியோ ஏன் இப்படி திட்டுகிறான் என குழம்பி போய் நிற்கிறார்.

குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
வானதியின் அம்மா சேரனுக்கு போன் செய்து எனது மகள் உன் தம்பியால் கர்ப்பமாக இருக்கிறாள் என கண்டபடி பேசுகிறார். வானதி அம்மா சொன்னதை கேட்ட சேரன் கோபத்தில் பாண்டியை அடித்துவிடுகிறார்.
உன்னை நான் எவ்வளவு நம்பினேன், நீ இப்படி செய்வாய் என்று நம்பவில்லை என மீண்டும் அடிக்கிறார். பாண்டி என்ன தான் என்னை சுற்றி நடக்கிறது என தெரியாமல் வானதிக்கு போன் செய்து கேட்கிறார்.
