அய்யனார் துணை சீரியல் பாண்டியனின் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்.. அவரே பகிர்ந்த தகவல்
அய்யனார் துணை
அய்யனார் துணை, ரசிகர்களின் பேராதரவுடன் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்.
4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக இந்த சீரியல் ஓடுகிறது. இந்த வார கதையில் சேரனுக்கு பெண் பார்க்கும் விஷயம் தான் பரபரப்பாக செல்கிறது.
இன்றைய எபிசோடில் சேரனை பார்க்க வந்த பெண் வீட்டாரில் ஒருவர் அவரின் ஜாதகத்தை படித்துவிட்டு சில சோகமான விஷயத்தை கூறிவிட்டார்.
இந்த ஜாதக காரருக்கு பெண் தோஷம் உள்ளது, அவர் இருக்கும் வீட்டில் பெண்கள் இருக்க மாட்டார்கள், அவருடன் இருப்பவர்களுக்கும் எந்த நல்லதும் நடக்காது என கூறிவிடுகிறார், இதனால் குடும்பமே சோகமாகிறார்கள்.

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ
பாண்டியன்
இந்த தொடரில் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றுள்ளவர் தான் Vj அருண் கார்த்தி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் சின்ன வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டேன்.
நான் பெரியவனாக வளர வளர அம்மா பாசம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் இருந்தேன். ஆனால் எனக்கு ஒரு அம்மாவாக இப்போது இருப்பது எனது மனைவி தான்.
ஒருமுறை அம்மாவை இழந்துவிட்டேன், மறுபடியும் எனது அம்மாவை இழக்க மாட்டேன் என கூறியுள்ளார்.