சர்ப்ரைஸாக கொடுத்து நிலாவை திக்குமுக்காட வைத்த சோழன், அழகான தருணங்கள்... அய்யனார் துணை எபிசோட்
அய்யனார் துணை
அய்யனார் துணை, இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட ஒரு தொடர்.
விஜய் டிவியில் இரவு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் கதைக்களம் 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை பயணமாக உள்ளது. சோழனுக்கு நிலாவுடன் எதிர்ப்பாராத விதத்தில் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வர அவர்களின் வாழ்க்கையே மாறுகிறது.
இப்போது கதையில் பாண்டியன்-வானதி காதல் பிரச்சனை செல்ல, இன்னொரு பக்கம் நிலா விவாகரத்து வாங்க மும்முரமாக இருப்பதும், சோழன் காதலை வெளிப்படுத்தவும் கஷ்டப்பட்டு வருகிறார்.
கொண்டாட்டம்
இந்த வாரம் ஒரு கலகலப்பான கொண்டாட்டம் நடக்கிறது. அதாவது நிலாவின் பிறந்தநாளை சோழன் நியாபகம் வைத்து கேக் எல்லாம் வாங்கி இரவு 12 மணிக்கு நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
அந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் காட்டப்படுகிறது. 5 பேரும் பிறந்தநாளை கொண்டாடிய போது நடேசன் வந்து ஒரு பிரச்சனையும் செய்துவிட்டு செல்கிறார், இதனால் சோழன் செம கோபம் அடைகிறார்.