மீண்டும் நிலாவிடம் அசிங்கமாக பேசிய வானதி அண்ணன், சோழன் காதுக்கு வந்த விஷயம், தரமான சம்பவம்... அய்யனார் துணை எபிசோட்
அய்யனார் துணை
அய்யனார் துணை தான் இப்போது ரசிகர்கள் விரும்பும் பெஸ்ட் சீரியலாக உள்ளது.
வழக்கமான நாயகி-வில்லி, மாமியார் கொடுமை, மருமகள் கொடுமை போன்று இல்லாமல் வித்தியாசமான கதைக்களமாக உள்ளது.
2025, இந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஆரம்பம் முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது, விஜய் டிவி டிஆர்பியிலும் 2வது இடத்தில் இருந்து வருகிறது.
கடந்த வார எபிசோடில் நிலாவின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட அதேசமயம் ஒரு பிரச்சனையும் வெடித்தது.
புரொமோ
இன்றைய எபிசோடில் நிலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது அலுவலகத்தில் நடக்கிறது. அடுத்து வானதி-பாண்டியன் போன் கால் கலகலப்பு ஒருபக்கம் செல்கிறது. பின் சேரன், நிலாவிற்கு லைசன்ஸ் வாங்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், நிலா பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது வானதி அண்ணன், பாஞ்சாலி நீ தானே 5 நபருடன் ஒரே வீட்டில் இருக்கிறாய் என வம்பிழுக்கிறார்.
இதனை அறிந்த பல்லவன் இதற்கு முன் நடந்த விஷயத்தை சேரன் மற்றும் சோழனிடம் கூற பெரிய சம்பவம் நடக்கிறது. நாளைய எபிசோடில் தரமான சம்பவம் இருப்பது நன்றாக தெரிகிறது.