நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட்
அய்யனார் துணை
அய்யனார் துணை, செம கதை, சூப்பர் பா, தரமான சீரியல் என மக்கள் கொண்டாடும் ஒரு சீரியல்.
4 அண்ணன்-தம்பிகளை சுற்றிய கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகிறது, இருண்டு போன இவர்களது வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுத்த விளக்காக உள்ளார் நிலா.
நேற்றைய எபிசோடில் நிலா-சோழன் லைசன்ஸ் வாங்க சென்ற காட்சிகள் ஹைலைட்டாக காட்டப்பட்டது.
பின் வானதி அண்ணன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நிலாவிடம் வம்பிழுத்த காட்சிகள் இடம்பெற்றன.
எபிசோட்
இன்றைய எபிசோடில், நிலா நடந்த விஷயங்கள் அனைத்தையும் சேரன்-சோழனிடம் அழுதபடி கூற இருவரும் கோபத்தில் வானதி அண்ணனை அடிக்க செல்கிறார்கள்.
அவரை நேரில் கண்டதும் 3 அண்ணன்-தம்பிகள் வெளுத்து வாங்குகிறார்கள். அந்த இடத்திற்கு எதர்சையாக வந்த பாண்டி மற்றும் அவர்களின் அப்பாவும் ஓட ஓட அவர்களை அடிக்கிறார்கள்.