அய்யனார் துணை சீரியலில் வந்த Train காட்சிகளை இப்படிதான் எடுத்தார்களா... படப்பிடிப்பு தள வீடியோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் அய்யனார் துணை.
கடந்த வாரம் எல்லாம் நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து சோழன் புதிய வீடு வாடகை பார்க்க ஆனால் கடைசியில் அவரது பிளான் பிளாப் ஆனது. நிலா எனக்கு அனைவருடனும் இருப்பது தான் பிடிக்கும், வீட்டிற்கு கொடுத்த அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
பின் எப்படியோ சோழன் போராடி அந்த பணத்தை வாங்கி வீட்டிற்கு புதிய டிவியும் வாங்கிவிட்டார்.

எபிசோட்
இந்த வாரம் சந்தாவிற்கு அவரது மாமாவுடன் திருமண நடக்க இருக்கிறது என்ற விஷயத்தை கூற அந்த திருமணத்தை தடுக்க அண்ணன்-தம்பிகள் நிலா அனைவரும் Trainல் உடனே கிளம்பினார்கள்.

மண்டபம் சென்ற சேரன் எப்படியோ திருமணத்தை நிறுத்திவிட்டார், சந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக கூற மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறார்கள். அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது, சந்தா-சேரன் திருமணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
இந்த நிலையில் அய்யனார் துணை சீரியலில் வந்த Train காட்சிகள் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு தள வீடியோ வெளியாகியுள்ளது. இதோ எப்படி அந்த காட்சிகள் எடுத்துள்ளார்கள் பாருங்க,