அட செம சந்தோஷமான கொண்டாட்டத்தில் அய்யனார் துணை சீரியல் நடிகர்கள்... போட்டோஸ் இதோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, தமிழகத்தில் உள்ள சீரியல் ரசிகர்களின் பேவரெட் தொடர்களில் ஒன்றாக உள்ளது.
2025, இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. நிலா-சோழன் திருமணம் நடக்க அங்கிருந்து கதை வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடுகிறது.
விஜய் டிவி குறுகிய காலத்திலேயே டாப் ஹிட் சீரியலாக மாறிவிட்டது.
கொண்டாட்டம்
இப்போது கதையில் நிலா அப்பா- சோழன் ஆகியோர் போட்டுக்கொண்ட சபதத்தின் கதைதான் ஒளிபரப்பாகிறது. நிலாவை அவரது அப்பா பாசமாக பேசி தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
அங்கு நிலாவுடன் சென்ற சோழனுக்கு நிறைய அவமானங்கள் நடக்கிறது. அடுத்த கதைக்களத்தில் சோழன் நிலா அப்பாவுடன் போட்ட சபதத்தில் ஜெயிப்பாரா இல்லையா என்பது பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் அய்யனார் துணை சீரியல் 150வது எபிசோடை எட்டிவிட்டதாம். இதனால் சீரியல் குழுவினர் செம சந்தோஷத்தில் புகைப்படம் எல்லாம் எடுத்துள்ளனர்.