காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துக்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம்
அய்யனார் துணை
4 அண்ணன்-தம்பிகள் கதை என்றாலும் விஜய் டிவியில் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகும் தொடர் அய்யனார் துணை.
நிலாவை வெறுப்பேற்ற காயத்ரி என்ற பெண்ணிடம் பழகி வந்த சோழனுக்கு அதுவே பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. நிலா எப்படியோ சோழனை காயத்ரி பிரச்சனையில் இருந்து காப்பாற்றிவிட்டார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், வீட்டிற்கு நிலா வந்தவுடன் சோழனிடம் அனைவரும் விளையாடினோம் என உண்மையை கூறுகிறார்கள்.
பின் சந்தோஷத்தில் இருந்த சோழனை நிலா தனியாக வெளியே அழைத்துச் செல்கிறார். பின் பல்லவன் அம்மாவை பார்த்த இடத்திற்கு சென்ற சோழனிடம் விஷயத்தை கூறுகிறார்.

இந்த இடத்தில் தான் பார்த்தேன், அவர் பல்லவன் அம்மாவா, அல்லது வேறுயாரா என்பதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.