கட்டாய திருமணம்... சேரனிடம் கண்கலங்கி அழுத சந்தா... பரபரப்பில் அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
சோழன் பணத்தை திருடியதை மன்னித்து அவரை மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொண்டார் அவருடைய முதலாளி. இதன்பின், வெளியூர் ட்ரிப் வந்துள்ளது அதற்காக நீதான் செல்ல வேண்டும் என முதலாளி கூற, சோழனும் கிளம்பினார். அவருடன் நிலாவும் சென்றார்.

நிலா - சோழன் பயணம் ஒரு பக்கம் இருக்க, தற்போது சேரன் - சந்தா இணைவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், சந்தாவின் விருப்பம் இல்லாமல், அவருடைய சொந்த மாமாவுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க அவர் குடும்பம் முடிவு செய்துவிட்டது. சேரணும் சந்தாவும் காதலித்து வரும் நிலையில், திருமணத்தை சேரன் தள்ளிவைத்தார்.

கண்கலங்கி அழுத சந்தா
இந்த நிலையில், தற்போது சந்தாவை மீண்டும் தங்களது ஊருக்கு அழைத்து செல்ல, அவருடைய பெற்றோர்கள் சென்னைக்கு வந்துவிட்டனர். அவர்கள் கண்டிப்பாக சந்தாவை அழைத்து சென்றுவிடுவார்கள் என அனிஷ், சேரனுக்கு போன் செய்து சொல்ல, பாண்டியனுடன் கிளம்பி சந்தா வீட்டிற்கு வருகிறார் சேரன்.

சேரனை பார்த்தவுடன் கண்கலங்கி அழுகிறார் சந்தா. அவரை சேரன் சமாதானம் செய்ய, பரபரப்பான இன்றைய எபிசோட் நிறைவுபெற்றது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri