பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட்
அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரையில் சில தொடர்கள் கதையே இல்லாமல் ஒளிபரப்பாகும். பல கதைகள் மிகவும் அழுத்தமான கதைக்களத்துடன் இருக்கும்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை அடுத்தடுத்து நல்ல கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வார எபிசோட் புரொமோவில், பல்லவன் யார் என்பதை பற்றி நிலா நடேசனிடம் கேட்பது போல் புரொமோ அமைந்தது.
நேற்றைய எபிசோடில், அம்மா இல்லாத சோகத்தில் இருக்கும் பல்லவனை சிரிக்க வைக்க அண்ணன்கள் செய்த கலாட்டாக்கள் தான் ஒளிபரப்பானது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், ரோட்டில் பார்த்த பல்லவன் அம்மாவிடம் சில உண்மைகளை கேட்கிறார் நிலா. அவர் பல்லவன் என் மகன், நடேசன் மகன் இல்லை என்கிறார்.
என்ன தான் ரகசியம் அது என தெரிந்துகொள்ள நடேசனை தனியாக கோவிலுக்கு அழைத்து வருகிறார் நிலா. அவரிடம் என்ன தான் ரகசியம், பல்லவன் உங்களது மகன் இல்லையா என கேட்கிறார்.

கொஞ்சம் யோசித்த நடேசன் பின் உண்மையை கூறுகிறார். நான் லாரி ஓட்டிக்கொண்டு எந்த ஊருக்கு செல்கிறேனோ அங்கு சாப்பிட ஒரு கடை பிடிப்பேன், அப்படி குஜராத் செல்லும் போது ஒரு கடையில் பல்லவன் அம்மா அவனுடன் அங்கு வேலை பார்த்து வந்தார்.
குஜராத் செல்லும் போது தான் இந்த பொம்பளைய பார்த்தேன், இந்த பெண் அவரது கணவர் இருவரும் ஹோட்டல் நடத்தினார்கள், பல்லவன் கை குழந்தை. அங்கு தான் சாப்பிடுவேன். ஒருமுறை குஜராத் சென்றபோது தான் தெரிந்தது அவரின் கணவர் இறந்தார் என்று.
அந்த ஆள் இறந்தபின் இப்போது ஒரு புருஷன் என்று இருக்கிறானே அவன் என்னை கல்யாணம் செய்துகொள் என குடைச்சல் கொடுத்துள்ளான், ஆனால் இவளுக்கு பிடிக்கவில்லை.

அவள் என்னிடம் என்னை எங்கேயாவது அழைத்த செல்லுங்கள் என கை குழந்தையுடன் உதவி கேட்க நான் நமது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். வீட்டிற்கு வந்ததும் சேரன், சோழன், பாண்டியன் 3 பேரும் பல்லவன் கூட விளையாட ஆரம்பித்தார்கள்.
அவளை தேடி தொந்தரவு செய்த அந்த நபர் எப்படியே இவளை கண்டுபிடித்து வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்ய இவளும் அவனுடனே சென்றுவிட்டாள்.
அந்த குழந்தை மற்றவர்களுடன் விளையாட என்னை பார்த்து சிரிப்பது என செய்ய நான் அவனும் எனது பிள்ளையாக இருக்கட்டும் என விட்டுவிட்டேன் என்கிறார்.
கடைசியில் இதை யாரிடமும் கூற வேண்டாம் என நடேசன் நிலாவிடம் கூறுகிறார். ஆனால் இவர்கள் பேசியதை மறைந்து நின்று கேட்டுவிடுகிறார் சேரன்.