பாண்டியன் சொன்ன வார்த்தையால் அதிரடி முடிவு எடுத்த வானதி, அடுத்த சீனே செம மாஸ்... அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, இளைஞர்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
அதிகம் இளைசுகள் சேர்ந்து நடிக்கும் இந்த சீரியல் வழக்கமான கதைக்களமாக இல்லாமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடராக உள்ளது. இப்போது கதையில் பாண்டியன்-வானதியின் காதல் கதை தான் சென்றுகொண்டிருக்கிறது.
வானதியின் காதலுக்கு அவரது வீட்டில் யாரும் சம்மதம் தெரிவிக்காததால் பெரிய சண்டையே நடந்தது. கடைசி எபிசோடில் வானதி வீட்டில் தன்னை எல்லோரும் அடிக்கிறார்கள் என்பதால் பையை தூக்கிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
புரொமோ
இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த வானதியிடம் தனியாக பேச வேண்டும் என பாண்டியன் அவரை கடற்கரை அழைத்து செல்கிறார். அங்கு எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும் ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ள முடியாது.
ஏற்கெனவே சோழன் திருமணம் செய்ததால் சேரன் அண்ணனை நிறைய கேள்விகள் கேட்கிறார்கள், இதில் எனக்கும் திருமணம் நடந்தால் சரியாக வராது என கூற அவரும் புரிந்துகொள்கிறார்.
பின் பாண்டியன் வானதியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு செல்கிறார். வீட்டிற்கு வந்த வானதியை வழக்கம் போல் அவரது பெற்றோர் அடிக்க தரமான செயல் செய்கிறார்.
அதாவது மகளிர் போலீஸிற்கு போன் செய்து வானதி புகார் அளிக்க போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து அவரது அம்மா, அப்பா, அண்ணனை மிரட்டுகிறார்கள்.