திருமணத்திற்கு பின் கணவனிடம் கண்கலங்கி அழுத நிலா.. காரணம் என்ன? அய்யனார் துணை சீரியல் அடுத்த வாரம் நடக்கவிருப்பது
அய்யனார் துணை
விவாகரத்துக்கு பின் தனது பெற்றோர்களுடன் இருந்த நிலாவை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றுவிடலாம் என முடிவு செய்தனர். இது நிலாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் மீண்டும் அய்யனார் துணை குடும்பத்தினருடன் வந்து சேர்ந்துவிட்டார்.

மேலும், சோழனை தற்போது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு திருமணமும் செய்துகொண்டார். கோவிலில் நிலா - சோழன் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. சென்ற வாரம் நிலா - சோழன் திருமண எபிசோட்கள் களைகட்டிய நிலையில், வரும் வாரம் என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக தற்போது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
வரும் வாரம்
நிலாவின் தந்தை நிலாவுக்கு கால் செய்து, சோழனுக்கும் உனக்கும் ஒரு ரிசெப்ஷன் ஏற்பாடு செய்யலாம் என முடிவு எடுத்துள்ளதாக கூறுகிறார். ஆனால், நிலா இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதன்பின், எதற்காக வேண்டாம் என கூறினாய் என நிலாவிடம் சோழன் கேட்க, 'நான் வீட்டிலிருந்து விலகிவிட்டேன் சோழன், எனக்கு யாரும் இல்லை என தோன்றுகிறது' என கூறி கண்கலங்கி அழுகிறார்.

தன் மனைவி கண்கலங்கியவுடன், "என்ன பேசுற நிலா, நான் உனக்காக இருக்கிறேன். நீ ரொம்பவே மாறிவிட்ட நிலா, கணவனை நம்பி மனம்விட்டு பேசுற, எனக்கு இது எப்போவோ அந்த ஃபீலிங், எனக்கு இப்போ ஆரம்பம் ஆகியிருக்கு நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு" என சோழன் கூறுகிறார்.