எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ

By Kathick Mar 22, 2026 06:20 AM GMT
Report

அய்யனார் துணை

கடந்த வாரம் அய்யனார் துணை சீரியலில் ரூ. 5 லட்சத்தை திருடி போலீசில் மாட்டிக்கொண்டார் சோழன். இதனால் தொழில் தொடங்க ரூ. 5 லட்சத்தை கொடுத்திருந்த நிலா, அந்த பணத்தை திரும்ப பெற்று, சோழனின் முதலாளியிடம் கொடுத்துவிட்டார். இதனால் கேஸை வாபஸ் பெற்று, சோழன் போலீஸிடம் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வரும் வாரத்திற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், தனது முதலாளியின் காலில் விழுந்து கதறி அழுகிறார் சோழன். இதனால் மனமிறங்கும் அவர், சோழனை மீண்டும் வேலைக்கு வரச்சொல்லிவிட்டார். நிலா அவமானப்பட கூடாது என்பதற்காகத்தான் இதை செய்தேன் என சோழன் கூறினார். ஆனால், தற்போது நிலா அவமானப்படவில்லை என நீ நினைக்கிறாயா என சோழனிடம் முதலாளி கேட்கிறார்.

கண்கலங்கிய சோழன்

இதன்பின், நிலா - சோழன் இருவரும் தெருவில் நடந்து வருகிறார்கள். அப்போது, கண்கலங்கி நிலாவிடம் பேசுகிறார் சோழன். 'எனக்காக நீங்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க என்று முதலாளி கூறினார். நான் திருந்த வாய்ப்பே இல்லை. அப்படி திருந்தலாம் என நினைத்து ஒரு அடி முன் எடுத்து வைத்தால், எனக்கே தெரியாமல் நான்கு அடி பின்னோக்கி சென்று விடுகிறேன்.

எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ | Ayyanar Thunai Serial Upcoming Week Promo Video

எனக்கு இருக்கும் ஆசையெல்லாம் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்வது மட்டும்தான். நீங்க திருவண்ணாமலையில் இருந்து சென்னை எந்த கனவோடு வந்தீங்களோ, அதெல்லாம் நடக்கவேண்டும். உங்களை நான் நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும். நான் ஒன்றும் அவ்வளவு மோசமான ஆள் இல்லை என்று உங்களிடம் காட்ட வேண்டும். எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்" என மனமுருகி கண்கலங்கி பேசுகிறார் சோழன். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US