சிறந்த சீரியல் விருதை தட்டி தூக்கிய விஜய் டிவி.. எந்த சீரியல் இந்த விருதை வென்றுள்ளது தெரியுமா?
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்துள்ளது. சரவணன் மீனாட்சி, பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, மௌனராகம் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளன.

மேலும், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை ஆகிய சீரியல்கள் TRP-யில் பட்டையை கிளப்பி வருகின்றன.
சிறந்த சீரியல்
இதில், தற்போதைய நிலையில் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணை உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் டாப் 5 சீரியல்களில் 5-வது இடத்தையும் இந்த சீரியல் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், SITSA எனும் விருது விழாவில் அய்யனார் துணை சீரியலுக்கு 'சிறந்த சீரியல்' விருது கிடைத்துள்ளது. சிறந்த சீரியல் விருதை வென்றுள்ள அய்யனார் துணை குழுவினருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.