பிக் பாஸ் வீட்டுக்கு வரும் சர்ச்சை பிரபலம்.. பற்றி எரியப்போகிறது ஷோ
பிக் பாஸ்
பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. விஜய் டிவியம் இதுவரை பல ப்ரோமோக்களை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் துவங்கும் தேதியை இதுவரை அறிவிக்கவில்லை.
வந்திருக்கும் தகவல்களின் படி அக்டோபர் 1ம் தேதி பிக் பாஸ் 7 தொடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஷோவில் போட்டியாளர்களாக பல முக்கிய பிரபலங்கள் வர இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
சர்ச்சை பிரபலம்
இதற்கு முந்தைய சீசன்களில் வந்து அதிகம் கவனம் ஈர்த்த சில பிரபலங்களை மீண்டும் ஷோவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
கடந்த சீசன் டைட்டில் ஜெயித்த அசீம் மீண்டும் பிக் பாஸ் 7ம் சீசனுக்கு வர பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். அவர் ஷோவுக்கு வந்தால் வீட்டில் நிச்சயம் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.