இந்த வாரம் கமல் விடுவாரா? மீண்டும் அதே விஷயத்தை செய்யும் அஸீம்!
அஸீம்
பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருபவர் அஸீம். சின்ன சண்டை வீட்டில் தொடங்கினால் அதை கத்தி கத்தி பெரிதாகிவிடுவது தான் அவரது வேலை.
அதற்காக கடந்த இரண்டு வாரங்களாக கமலிடம் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார். "உங்கள விமர்சிக்கல.. கண்டிக்கிறேன்' என கமல் மிகவும் கோபமாக கூறி இருந்தது எல்லோருக்கும் தெரியும்.
அஸீம் - மஹேஸ்வரி சண்டை
இந்த வாரம் போட்டியாளர்கள் டிவி சேனல் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் அஸீம் டீமில் இருக்கும் மகேஸ்வரி அவருடன் சண்டை போட்டிருக்கிறார்.
ஜூட்ஜ் என்ன பண்ணனும்னு நீங்க ஏன் சொல்றீங்க, நீங்க என்ன ஜட்ஜுக்கு படிச்சிட்டு வந்தீங்களா என மகேஸ்வரி கேட்க சண்டை தொடங்குகிறது. இந்த டிவி சேனல் டாஸ்கில் இது போல பல சண்டைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் டாஸ்கில் அஸீம் சொன்னதை அப்படியே ஆயிஷா, ஷெரினா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் செய்ததை கமல் கண்டித்து இருந்தார். அதே போல இந்த வாரமும் அஸீம் மற்றவர்களை influence செய்ய தொடங்கி இருக்கிறார். இந்த வாரம் கமல் விடுவாரா?