பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ
அழகே அழகு
விஜய் தொலைக்காட்சியில் பெண்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது அழகே அழகு சீரியல்.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடரில் 3 பெண்கள் திருமணம் செய்த பிறகு அனுபவிக்கும் வேதனைகளை பற்றிய கதையாக இந்த தொடர் உள்ளது. கடந்த வாரம் கதையில் ஸ்ருதி மலர் அம்மா வீட்டிறகு செல்ல பெரிய ரகளையே நடந்துவிட்டது.

மலரின் தம்பி அழைத்ததால் தான் ஸ்ருதி அங்கு சென்றார் என குடும்பத்தினர் அனைவரும் பழி போட்டு பேசுகிறார்கள். இதனால் மலரும் தனது அம்மா தம்பிக்காக மிகவும் கடுமையாக சண்டை போட்டு பேசியிருந்தார்.
ஆனால் பாக்யராஜ் தடுத்ததால் பிரச்சனை அப்படியே முடிந்தது.
புரொமோ
இந்த வார எபிசோடின் புரொமோவில், மலர் தினமும் காலையில் எழுந்துகொள்வது போல் எழவில்லை.
அசந்து தூங்கிவிட்டார், அதனால் அவரது மாமனார், மாமியார் பெரிய ரகளை செய்து தனது மகனிடமும் மலர் வேண்டுமென்றே தான் எழவில்லை என்கிறார்கள்.

அந்த கோபத்தில் பாக்யராஜ் மலரிடம் வேண்டுமென்றே எனது அம்மா-அப்பாவிற்கு உதவ கூடாது என்பதற்காகவே இப்படி செய்கிறாய் என கூறி கோபத்தில் மலரை வீட்டைவிட்டு வெளியேறவும் கூறுகிறார். இதனால் கோபத்தில் மலரும் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri