மாமியார் செய்த சதி, வீட்டை விட்டு போகும் மதி.. அழகே அழகு அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியில் ரசிகர்களை கவர தொடங்கி இருக்கிறது அழகே அழகு சீரியல். மோசமான மாமியார் மற்றும் குடும்பத்திடம் சிக்கிக்கொள்ளும் இரண்டு விதமான மருமகள்கள் பற்றிய கதை தான் இது.
பயம் இல்லாமல் மதி தனது மாமியாருக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். அதுவே தற்போது பெரிய பபிரச்சனையாக மாறி இருக்கிறது.
மகன் குடித்த டீ-கப் ஏன் எடுத்து வைக்கவில்லை, உங்க அம்மா வளர்ப்பை சொல்லணும் என மாமியார் மோசமாக பேச, அதை sink-ல் வைக்க வேண்டும் என உங்கள் மகனுக்கு தெரியாதா, உங்க வளர்ப்பு தான் சரியில்லை என பதிலடி கொடுக்கிறார் மதி.

வீட்டை விட்டு போன மதி
மாலையில் இதுவே பெரிய சண்டையாக வெடிக்கிறது. எனக்கு புள்ள வளர்க்க தெரியல என சொல்றா என மகனிடம் வத்தி வைக்கிறார் மாமியார்.
அதனால் மதி மன்னிப்பு கேட்க வேண்டும் என சுரேஷ் சொல்ல, 'செய்யாத தப்புக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது' என மதி சொல்கிறார்.
வீட்டை விட்டு போ என சுரேஷ் சொல்ல, மதி உடனே தைரியமாக கிளம்பி சென்றுவிடுகிறார். ப்ரோமோவை பாருங்க.