மாமனாரிடம் வசமாக சிக்கிய மதி, மலர், மாமியார் செய்த வேலை... அழகே அழகு சீரியல் புரொமோ
அழகே அழகு
விஜய் தொலைக்காட்சியில் பல குடும்பங்கள் சந்திக்கும் விஷயத்தை பற்றி பேசும் ஒரு தொடராக உள்ளது அழகே அழகு சீரியல்.
கடந்த வாரம் எல்லாம் மலர் வீட்டில் கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை சமாதாளப்படுத்தி எப்படியோ பாக்யராஜ் வீட்டிற்கு அழைத்து வர அவர் சில கண்டிஷன் போட்டார்.
முதலில் சுரேஷை தனது அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். அதன்பின் வீட்டு வேலைக்கு ஆள் வைக்க வேண்டும் என்றார்.
மலர் செய்த விஷயங்கள் அவரது மாமனாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

புரொமோ
இப்போது கதையில் மதி-மலரின் மாமியாருக்கு திரையரங்கம் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அதனை அவர் தனது கணவரிடம் கூற அவர் போக கூடாது என தடுக்கிறார்.
பிறகு மதி, நாம் 3 பேரும் திரையரங்கம் செல்லலாம் என பிளான் போட்டு கிளம்புகிறார்கள். அப்போது கணவரை பார்த்த லட்சுமி பயத்தில் எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்துவிடுகிறார். இதனால் மதி-மலர் இருவரும் தங்களது மாமியார் மீது செம கோபப்படுகிறார்கள்.
இதோ கலகலப்பான புரொமோ,