சாப்பாட்டில் செக் வைத்த மதி, திணறிய மாமனார்-மாமியார்... அழகே அழகு சீரியல் எபிசோட்
அழகே அழகு
மாமனார்-மாமியார் கொடுமையை பற்றி பேசும் கதையாக அழகே அழகு சீரியல் அமைந்துள்ளது.
எது சொன்னாலும் மறு பேச்சு பேசாமல் அப்படியே செய்யும் மருமகள், இன்னொருவர் எது சொன்னாலும் தனக்கு அது அநியாயம் என்று தெரிந்தால் தட்டிக்கேட்பவர்.
இவர்களின் வாழ்க்கைப் போராட்ட கதையாக அழகே அழகு சீரியல் கதைக்களம் உள்ளது. இந்த வார எபிசோடின் புரொமோவில், வீட்டிலேயே அடைந்து கிடக்கும் தனது மனைவி அழகு மலரின் பிறந்தநாளை மறக்க முடியாததாக்க அவரது கணவர் பாக்யராஜ் நிறைய பிளான் போடுகிறார்.
அதை அவர் செய்து முடிக்கிறாரா அல்லது பிரச்சனை ஆகுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், மலர் பிறந்தநாள் என்பதால் கோவிலுக்கு பாக்யராஜுடன் செல்கிறார், இதனால் சமையல் வேலையை மதி கவனிக்கிறார்.
இட்லி மற்றும் சாம்பார் மதி செய்ய அவரது மாமனார் மாமியால் சட்னி இல்லாமல் சாப்பிட முடியாது என சாப்பிடாமல் சென்றுவிடுகிறார்கள். பின் இருவரும் பசியால் மிகவும் தவிக்கிறார்கள், சுகர் குறைந்துவிட்டது என மாமனார் தண்ணீர் குடித்து புலம்புகிறார்.

மலர் வீட்டிற்கு வந்ததும் பிரச்சனை செய்து சட்னி அரைத்து சாப்பிட கொண்டு வர சொல்கிறார்கள். உடனே மலர் சமைக்க வர அவரை எதுவும் செய்ய விடாமல் மதி தடுக்கிறார். பின் முன்பு வைத்து இட்லி சாம்பாரையே மலர் கொண்டு செல்ல அவர்கள் சாப்பிடுகிறார்கள்.
மதி, இவ்வளவு தான், உங்களை மிரட்டி சமைக்க வைக்கிறார்கள், விடுங்கள் என கூறிவிட்டு காலேஜ் செல்கிறார்.