கில்லி படத்தை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்த பாகுபலி தி எபிக்.. ரீ ரிலீஸ் வசூல் விவரம்
பாகுபலி ரீ ரிலீஸ்
ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்த இந்திய திரைப்படம் பாகுபலி 2.
2015ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி மற்றும் 2017ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் இந்திய சினிமாவின் பெருமை ஆகும். இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது.

இதை தொடர்ந்து வெளியான ஆர்.ஆர்.ஆர் மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்கள் இதனை இன்னும் பெரிதாக்கியது. பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களை ஒன்றிணைத்து பாகுபலி தி எபிக் என்கிற படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.
இதில் பாகுபலி 3 படத்திற்கான லீடை ராஜமௌலி வைத்துள்ளார். சொர்க்கத்தில் பாகுபலிக்கும் இந்திரனுக்கும் சண்டை என இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. பாகுபலி 3ல் தான் இவர்களுக்கு இடையே எப்படி சண்டை உருவானது என்பதற்கான விடை கிடைக்கும்.

வசூல்
இந்த நிலையில், ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாகுபலி தி எபிக் படம் உலகளவில் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 33+ கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆனபோது செய்த மொத்த வசூலை பாகுபலி தி எபிக் முறியடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.