பாகுபலி தி எபிக் ஒரு பார்வை
ராஜமௌலி என்ற ஒற்றை இயக்குனர் தன் சிறு மூளையில் தன் தந்தையின் உதவியுடன் உருவாக்கிய மேஜிக் சாம்ரஜ்ஜியம் தான் இந்த பாகுபலி, பேன் இந்தியா என்ற சொல்லை உருவாக்கிய முதல் படமாக பாகுபலி அமைந்தது.
முதல் பாகம் தெலுங்கை தவிற வேறு எந்த மாநிலத்திலும் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வந்த பாகுபலி 600 கோடி வசூலை ஈட்டி, இதற்கு மேல் ஒரு படத்திற்கு எதிர்ப்பார்ப்பு இருக்க முடியாது என்று வானத்தின் உச்சியில் எதிர்பார்ப்பை தொங்கவிட்டு பாகுபலி-2வை ரிலிஸ் செய்து 1800+ கோடி வசூலை அள்ளினார்கள்.
அப்படி இந்த 2 பாகத்திலும் நம்மை மிரள வைத்த ராஜமௌலி, இந்த ஜென் சி ரசிகர்களுகாக 2 பாகத்தையும் ஒரே பாகமாக 3.45 மணி நேரமாக கட் செய்து பாகுபலி தி எபிக் என்று வெளியிட்டுள்ளனர். இதில் எதை எடுத்தார்கள் எந்த காட்சியை எப்படி காட்டினார்கள் என்பதன் பார்வையே இது.

பாகுபலி எப்படி உருவாகினான்
ஊருக்கே தெரிந்த கதை என்றாலும் இப்போது உள்ளவர்களுக்கு தெரிய ஒரு சின்ன ரீகேப், ராஜாமாதா கையில் ஒரு குழந்தையுடன் இரத்தம் சொட்ட பாகுபலி மகனை ஓடும் ஆற்றில் மூழ்கிய நிலையில் குழந்தையை காப்பாற்றி அவர் இறக்கிறார்.
பிறகு அந்த குழந்தை வளர்ந்து பாகுபலி சாம்ரஜ்ஜியம் நோக்கி செல்கிறது, அங்கு அவந்திகா மீது காதல், அந்த காதல் கைக்கூட வேண்டுமென்றால் கைதாகியுள்ள தேவசேனாவை காப்பாற்றும் நிலை உருவாகிறது.
அவரும் தேவசேனாவை காப்பாற்ற, அங்கு வந்த பல்வாள் தேவன் மகன் தலைதை துண்டிக்க, பிறகு கட்டப்பா மூலம் பாகுபலி மகன் என தெரிந்துக்கொள்கிறார்.
பிறகு பாகுபலி வரலாறு தொடங்க, பாகுபலி காலகேயர்கள் போரில் மக்களை காப்பாற்றி போரை வெல்ல, ராஜமாதா ஆட்சியை தன் சொந்த மகன் பல்வாள் தேவனை விட்டுவிட்டு, பாகுபலியை அரசனாக்குகிறார்.
இங்கிருந்து பல்வாள் தேவன் சூழ்ச்சி தொடங்க, குந்தலதேச ராணி தேவசேனாவை வைத்து பல்வாள் தேவன் ஆடும் ஆட்டததில் ராஜ்ஜியத்தை இழந்து பாகுபலி மக்களுடன் வர, கட்டப்பாவை வைத்தே பாகுபலியை கொல்லும் நிலைக்கு பல்வாள் தேவன் கொண்டு செல்கிறான், அதோடு தேவசேனாவையும் சிறைபிடிக்க, பாகுபலி மகன் மீண்டும் வந்து ராஜ்ஜியத்தை எப்படி மீட்டான் என்பதே இந்த பாகுபலி சினிமா சரித்திரம்.
படத்தில் என்ன இருக்கு, என்ன இல்லை
பாகுபலி இரண்டு பாகத்தையும் ஒன்றாக எடிட் செய்ததில் பல காட்சிகளை எடுத்துள்ளனர், ஆனால், முக்கியமான காட்சிகள் அனைத்துமே உள்ளது.
குறிப்பாக தமன்னா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே வாய்ஸ் ஓவரிலேயே வந்து அதை கடந்து சென்றுள்ளனர். அதோடு முதல் பாகம் இரண்டாம் பாதியில் தூதுவனை தேடி செல்வது, அங்கு வரும் பாடல் என படத்தின் இரண்டு பாடல்களை கட் செய்துள்ளனர். ஆங்கங்கே சில காட்சிகளுக்கு கத்திரி விழுந்துள்ளது.
இப்படியாக முதல் பாகம் முடிய அது தான் இடைவேளை, கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்துவதை இடைவேளையாக விட்டு, இதற்காக இரண்டு வருடம் காத்திருக்க வேண்டாம் என்ற கார்ட் போட்டது ராஜமௌலி குசும்புகள்.
அதோடு இரண்டாம் பாகம் இடைவேளை அடுத்து தொடங்க, அனுஷ்கா சம்மந்தப்பட்ட காதல் காட்சிகள் பல கட் செய்துள்ளனர், அதோடு கண்ண நீ தூங்கடா பாடலும் கட், பிறகு நேராக கதை குந்தலதேசத்திலிருந்து மகிழ்மதி வருகிறது. அதிலிருந்து படம் கிளைமேக்ஸ் வர பெரிய கட் இல்லாமலேயே செல்கிறது.
என்ன நல்லாருக்கு
பாகுபலி என்றாலே பிரமாண்டம் தான், இதில் எதை நல்ல இருக்கு என்று சொல்வது என்றால், முதலில் பாகுபலி ட்ராமா தான், இன்றும் அதே எமோஷ்னல் அப்படியே ஆடியன்ஸை 3.45 மணி நேரம் கட்டி போடுகிறது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோரை சற்று இளமையாக பார்ப்பது சந்தோஷம், அதோடு இராஜமௌலி தாண்டி மரகதமணி இசை இப்படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது இப்போது பார்க்கும் ரசிகர்களுக்கும் புரியும்.
எது நன்றாக இல்லை.
எடிட்டிங்-ல் பல இடங்களில் கட் செய்வது அப்பட்டமாக பல இடங்களில் தெரிகிறது, அதிலும் குந்தலதேசத்தில் அனுஷ்காவை காப்பற்றும் இடத்தில் ஏன் இப்படி ஒரு கட், ஏதோ பல காலத்து படம் போல் இருந்தது.
பாகுபலி 3
சரி அதெல்லாம் இருக்கட்டும் பாகுபலி 3 இருக்கிறதா என்றால், அட இருக்குங்க, ஆனால், பாகுபலி 3 அனிமேஷனில், அதுவும் சொர்க்கத்தில் இந்திரனுடன் மோதும் பேண்டஸி படமாக வரபோகிறது.
மொத்தத்தில் பாகுபலி 3.45 மணி நேரம் கண் இமைக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் சுவாரஸ்ய புதையல்.