ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்த பாகுபலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பாகுபலி
2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி. இதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு பாகுபலி இரண்டாம் பாகம் வெளிவந்து உலகளவில் ரூ. 1800+ கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.

தெலுங்கு திரையரங்கில் மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே இப்படம் உதாரணமாக மாறியது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர்.
பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டு பாகங்களையும் இணைத்து பாகுபலி தி எபிக் என்கிற தலைப்பில் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இதில் சில காட்சிகள் அனிமேஷன் மூலம் இணைத்துள்ளார்களாம்.
முதல் நாள் வசூல்
இந்த நிலையில், ரீ ரிலீஸ் ஆன பாகுபலி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரீ ரிலீஸில் உலகளவில் ரூ. 25+ கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை பாகுபலி படைத்துள்ளது.
