ஆட்டோவில் லூட்டி அடித்த பாக்கியா- உடன் யாரு இருக்கா பாருங்க, ஜாலியான வீடியோ
பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கிறது. பாக்கியா வாழ்க்கையில் வெற்றிப்பெற்றால் அது நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் என பேசும் அளவிற்கு சீரியல் மக்களுடன் ஒன்றிவிட்டது.
சீரியலில் அடுத்து என்ன
பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்திற்கு கையெழுத்து வாங்கி அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டார் கோபி. ஆனால் அவரால் வீட்டில் மாட்டிக் கொள்ளாமல் எத்தனை நாள் இப்படி திருட்டுத்தனம் செய்வார் என தெரியவில்லை.
அவரது அப்பா இப்போது நடக்க பயிற்சி செய்து வருகிறார், அவர் குணமாகிவிட்டால் கதையில் பெரிய மாற்றம் ஏற்படும் என தெரிகிறது.
பெண்களை சந்திக்கும் சீரியல் குழு
இப்போது பாக்கியலட்சுமி சீரியல் குழு ஊர் ஊராக சென்று பொது மக்களை அதாவது முக்கியமாக குடும்ப தலைவிகளை சந்திக்கிறார்கள். கடைசியாக அவர்கள் மதுரை சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
கியூட் வீடியோ
இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி தொடர் புகழ் சுசித்ரா படப்பிடிப்பு தளத்தில் செல்வியுடன் எடுத்துக்கொண்ட கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.