எழிலுக்கு பளார்னு அரை விட்ட பாக்கியலட்சுமி.. அப்படி என்ன தப்பா கேட்டுட்டாரு?
பாக்யலக்ஷ்மியை தான் பழனிச்சாமி பெண் பார்க்க வந்திருக்கிறார் என நினைத்துக்கொண்டிருக்கும் கோபி நேராக அவர் வீட்டுக்கே சென்று மிரட்டுகிறார். ஆனால் அங்கிருக்கும் பாடிகார்டுகளை பார்த்து பயந்துபோகும் அவர் வெளியே வந்துவிடுகிறார்.
அப்போது மகன் எழிலும் அங்கே வர கோபி செய்த விஷயம் தெரிய அவருக்கு தெரிய வந்துவிடுகிறது. கோபி விஷயத்தை சொல்லி ஆதங்கமாக பேச, எழில் அவருக்கு பதிலடி கொடுக்கிறார்.
அம்மா விரும்பினால் நானே அவருக்கு இரண்டாம் திரும்ணம் செய்து வைப்பேன் என கூறுகிறார். அதை கேட்டு கோபி இன்னும் கோபமாக அங்கிருந்து செல்கிறார்.
பளார் விட்ட பாக்யா
எழில் அதற்குப்பிறகு பழனிச்சாமி மூலமாக தான் அடுத்து படம் இயக்கும் விஷயம் தொடர்பாக ஒரு முக்கிய நபரை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.
அந்த விஷயம் பற்றி அம்மா பாக்யாவிடம் கூறிவிட்டு, தான் அப்பாவையும் பழனிச்சாமி சார் வீட்டில் பார்த்தேன் என கூறிவிடுகிறார். 'பழனிச்சாமி உன்னை பெண் பார்க்க தான் இங்கே வந்தார் என அப்பா நினைத்துக்கொண்டிருக்கிறார்' என எழில் கூறுகிறார்.
அதன் பின் 'பழனிச்சாமி சாருக்கு எதுக்கு எங்க எங்கயோ போய் பொண்ணு பாத்துட்டு.. உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு.. நானே உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுறேன்' என எழில் சொல்ல, பாக்யா கடும் கோபமாக அவனை அறைந்துவிடுகிறார். அவரும் கேட்டதற்கு மன்னிப்பு கேட்டுவிடுகிறார்.
அதன் பின் கோபி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பேசும்போது பழனிச்சாமி பற்றி கூறுகிறார். அதற்கு அவர் அம்மா பழனிசாமியை புகழ்ந்து பேச கோபி மேலும் கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
விஜய் கொடுத்த மிகப்பெரிய கிப்ட்.. 600/600 மார்க் வாங்கிய நந்தினிக்கு என்ன கொடுத்தார் தெரியுமா?

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
