கல்லூரி மாணவியாக பாக்கியா.. அதுவும் தனது மகளுடன்.. அதிர்ச்சியில் கோபி! ப்ரோமோ வீடியோ..
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தனது தொழிலுக்காக லோன் கேட்டு வங்கிக்கு பாக்கியா சென்றிருந்தார். அப்போது அங்கே கல்லூரி முடித்து டிகிரி இருந்தால் மட்டுமே இந்த லோன் தருவோம் என்று கூறிவிட்டனர்.
இதனால் பாக்கியா கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என முடிவு செய்துள்ளார். அதுவும் தனது மகள் இனியா எங்கு படிக்க சேர்ந்துள்ளாரோ, அங்கேயே பாக்கியாவும் சேர்ந்துள்ளார்.
கல்லூரி மாணவியாக பாக்கியா
தனது தாய்யை கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என பாக்கியாவிற்கு உறுதுணையாக நிற்கிறார் எழில். பாக்கியா கல்லூரியில் சேர்ந்த விஷயத்தை இனியா தனது தந்தை கோபியிடம் கூறுகிறார்.
அதுவும் தன்னுடைய கல்லூரியிலேயே தனது அம்மா சேர்ந்துள்ளார் என்று கூறியவுடன் கோபி பேரதிர்ச்சி அடைகிறார்.
இதுதான் வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்த என்னென்னவெல்லாம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்க போகிறது என்று..
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
52 வயதில் காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. வீடியோ இதோ