ராதிகா கீழே விழுந்த அன்று என்ன நடந்தது, பாக்கியாவிடம் உண்மையை கூறிய நபர்.. பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி புரொமோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் கடந்த 2020ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் இது.
படிக்காத மனைவியை எனக்கு கட்டிவைத்து எனது வாழ்க்கையை நாசம் செய்துவிட்டீர்கள் என கோபி ராதிகாவை மறுமணம் செய்தார்.
ஆனால் அவரை திருமணம் செய்ததில் இருந்து ஒரே பிரச்சனையாக சந்தித்து வருகிறார் கோபி. ஈஸ்வரி தான் எனது குழந்தையை கொன்றார் என ராதிகா நீதிமன்றத்தில் கூற அவரை நீதிமன்ற காவலில் தற்போது வைத்துள்ளார்கள்.
இந்த பிரச்சனையில் இருந்து எப்படி ஈஸ்வரியை வெளியே கொண்டு வரப்போகிறோம் என பாக்கியா குடும்பம் படு குழப்பத்தில் உள்ளார்கள்.
பரபரப்பு புரொமோ
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ராதிகாவின் மகள் மயூ, பாக்கியாவிடம் எனது அம்மா பாட்டி தள்ளி கீழே விழவில்லை என கூற பாக்கியா சந்தோஷம் அடைகிறார்.
அதோடு வக்கீலை சந்தித்து இந்த விஷயத்தை கூற மயூ நீதிமன்றம் வர வேண்டும் என்கிறார். இதனால் குழந்தையை எப்படி நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியும் என குழப்பத்தில் உள்ளார்.