இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது. அதில் வந்த காட்சி தான் அதற்கு காரணம்.
இனியாவின் மாமனார் ஏமாற்றி பாக்யாவின் இரண்டு ஹோட்டல்களையும் வாங்கிக்கொண்ட நிலையில் தற்போது பாக்யா ஒரு சின்ன இடமாக பார்த்து ஒரு சின்ன மெஸ் திறக்கிறார். அதற்கு பாக்கியலட்சுமி மெஸ் என பெயர் வைக்கிறார் அவர்.
இனியா அதிரடி
அம்மாவின் இந்த நிலையை பார்த்து ஷாக் ஆகும் இனியா இதற்கு தனது மாமனார் தான் காரணமா என கேட்கிறார். அவர் உங்களை கட்டாயப்படுத்தி வாங்கினாரா என இனியா கேட்க, நானாக தான் கொடுத்துவிட்டேன் என தெரிவித்து இருக்கிறார்.
அதன் பின் இனியா அவர் வீட்டுக்கு சென்று எல்லோருடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மாமனாரை பார்த்து ஹோட்டல் விவகாரம் பற்றி கேள்வி கேட்கிறார்.
அதெப்படி நீங்க கட்டாயப்படுத்தி வாங்குவீங்க என கோபமாக கேட்கிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.